திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி சஷ்டி வழிபாடு



நத்தம்: திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆனி மாத சஷ்டியை முன்னிட்டு சுவாமிக்கு பால், பழம், பன்னீர், விபூதி,சந்தனம், புஷ்பம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள், சிறப்பு அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. அருகிலுள்ள காமாட்சி மவுனகுருசாமி மடத்திலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

இதுபோல் நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோயில் தண்டபாணி சன்னதி, வேம்பார்பட்டி பாலமுருகன் கோயில், குட்டூர் உண்ணாமுலை அம்பாள் கோயில் முருகப்பெருமான் சன்னதியில் சிறப்பு பூஜைகள் நடந்தது.

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்