காஞ்சி கவுசிகேஸ்வரர் கோவிலில் அதிருத்ர சண்டி யாக நிறைவு விழா



 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கவுசி கேஸ்வரர் கோவிலில், உலக நன்மைக்காக நடைபெற்ற அதிருத்ர மகா சண்டி யாக நிறைவு விழா நேற்று விமரிசையாக நடைபெற்றது.

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் வடக்கு மாட வீதியில், காமாட்சி அம்பாள் உடனுறை கவுசிகேஸ்வரர் கோவில் அமைந்து உள்ளது. இக்கோவிலில், உலக மக்கள் நலம் பெறவும், அனைத்து ஜீவராசிகளும் நோய் நொடியின்றி வாழ வேண்டியும், காஞ்சி சங்கராச்சாரியார் சுவாமிகளின் ஆசியுடன் கடந்த ஜூன் 12-ம் தேதி அதிருத்ர மகா சண்டி யாகம் தொடங்கியது. இந்த யாகத்தின் நிறைவு விழா நேற்று நடைபெற்றது. தர்மலிங்க சிவாச்சாரியார் தலைமையில் சிறப்பு யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. இதை தொடர்ந்து, கவுசிகேஸ்வரருக்கு மாலை மாற்றி, சிறப்பு திருக்கல்யாண உத்சவம் நடைபெற்றது. பின், மூலவர் கவுசி கேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் கலசாபிஷேகங்கள் செய்யப்பட்டு, துாப தீப ஆராதனைகள் நடந்தேறின. இவ்விழாவில் திருப்பரங்குன்றம், சென்னை பகுதிகளைச் சேர்ந்த வேதம் பயிலும் மாணவர்கள், பக்தர்கள் பலர் பங்கேற்றனர். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை சிங்கப்பூரைச் சேர்ந்த பத்மா –- மீனாட்சி சுந்தரம் தம்பதி செய்திருந்தனர்.

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்