சூலூர்: சூலூர் வட்டார சிவாலயங்களில் நடராஜ பெருமானுக்கு ஆனி திருமஞ்சன உற்சவம் நடந்தது.
ஆனி திருமஞ்சனத்தை ஒட்டி, சூலூர் வட்டார சிவாலயங்களில் உள்ள நடராஜ பெருமானுக்கு , பால், தயிர், இளநீர், விபூதி உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. சூலூர் வைத்தீஸ்வரன் கோவில், சின்னியம் பாளையம் கணபதீஸ்வரர் கோவில், கருமத்தம்பட்டி சென்னி யாண்டவர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் ஆடல் வல்லானுக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.