கீழக்கரை முத்துமாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்



கீழக்கரை; கீழக்கரை அருகே காஞ்சிரங்குடி ஊராட்சியில் உள்ள பக்கீரப்பா தர்கா செல்லும் வழியில் கிழக்கு முத்தரையர் நகரில் இன்று காலை கும்பாபிஷேகம் நடந்தது. பக்கீரப்பா தர்கா அருகே உள்ள கடற்கரையோரத்தில் கிழக்கு முத்தரையர் நகரில் உள்ள கங்கை விநாயகர், முத்துமாரியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் கோபுர விமான கலசத்தில் சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.

மூலவர்களுக்கு 11 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாரதனைகள் நடந்தது. பக்தர்களுக்கு குளிர்பானம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை காஞ்சிரங்குடி கிழக்கு முத்தரையர் நகர் கிராம பொதுமக்கள் இளைஞர் சங்கத்தினர் செய்திருந்தனர். சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்