ரெகுநாதபுரம்; ரெகுநாதபுரம் கீழவலசையில் உள்ள பாமா, ருக்மணி சமேத கிருஷ்ண பரமாத்மா கோயிலில் இன்று கும்பாபிஷேகம் நடந்தது.
நேற்று அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை உள்ளிட்ட முதல் கால யாகசாலை பூஜையுடன் விழா துவங்கியது. இன்று காலை விஸ்வரூபம், திவ்ய பிரபந்தம், நாடி சந்தனம், பூர்ணஹுதி உள்ளிட்டவைளுக்கு பிறகு காலை 9:00 மணிக்கு கடம் புறப்பாடு நடந்தது. கோபுர விமான கலசத்தில் நெல்லை மாவட்டம், சுத்தமல்லி சீனிவாச சாஸ்திரிகள் குழுவினர் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். மூலவர்களுக்கு 16 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் தொடர்ந்து நடந்தது. காலை 11:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட மேடையில் உற்ஸவமூர்த்திகளான பாமா, ருக்மணி சமேத கிருஷ்ணருக்கு திருக்கல்யாண உற்ஸவம் நடந்தது. மணமக்கள் வீட்டார்கள் சார்பில் பல்வேறு வகையான தட்டுகளில் சீர் வரிசைகள் கொண்டுவரப்பட்டன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ரெகுநாதபுரம் யாதவர் சங்கம் மற்றும் கும்பாபிஷேக விழா குழுவினர்கள் செய்திருந்தனர்.