நல்லதங்காள் கோயில் கும்பாபிஷேகம்; திரளான பக்தர்கள் பங்கேற்பு



வத்திராயிருப்பு; வத்திராயிருப்பு தாலுகா அர்ச்சுனாபுரம் நல்லதங்காள் கோயில் கும்பாபிஷேகம் இன்று கோலகாலமாக நடந்தது. இக்கோயிலில் நேற்று மாலை புதிய நல்லதங்காள் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு யாகசாலை பூஜைகள் நடந்தது. இதனையடுத்து இன்று காலை 7:40 மணிக்கு மேல் இரண்டாம் கால யாகசாலை பூஜைகள், பூர்ணாஹூதி, கும்பங்கள் புறப்பாடுடன் கும்பாபிஷேக பூஜைகள் துவங்கியது. காலை 9:40 மணிக்கு மேல் மூலவர் விமானம், பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மனை தரிசனம் செய்தனர். விழாவில் பல்வேறு கோயில்களின் செயல் அலுவலர்கள், அரசுத்துறை அலுவலர்கள், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். டி.எஸ்.பி. பாலச்சந்திரன் தலைமையில் ஏராளமான போலீசார், தீயணைப்புத் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்