பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஆடி பிரம்மோற்ஸவம் ஜூலை 21 கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது.
மதுரை அழகர் கோயிலை போன்று அனைத்து விழாக்களும் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் நடக்கிறது. இங்கு மூலவர் பரமசுவாமி அருள் பாலிக்கிறார். இந்த ஆண்டு ஆடி பிரமோற்ஸவம் ஜூலை 20 இரவு காப்பு கட்டுதல், ஜூலை 21 காலை 10:45 மணிக்கு கருட கொடியேற்றப்பட்டு துவங்க உள்ளது. அன்று இரவு அன்ன வாகனத்தில் பெருமாள் உலா வருகிறார். தொடர்ந்து காலை, மாலை சிம்ம, சேஷ, கருட, அனுமன், யானை வாகனங்களில் அருள்பாலிக்க உள்ளார். ஜூலை 26 இரவு 7:00 மணிக்கு ஆண்டாள், பெருமாள் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. மறுநாள் இரவு பூ பல்லக்கில் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் திருவீதி உலா நடக்கும். ஜூலை 29 காலை 9:30 மணிக்கு ஆடி தேரோட்டம் ரத வீதிகளில் நடக்க உள்ளது. இரவு சயன பல்லக்கு, ஜூலை 30 காலை தீர்த்தவாரி நடந்து, இரவு கொடி இறக்கத்துடன் விழா நிறைவடையும். ஏற்பாடுகளை சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்து வருகின்றனர்.