திரவுபதியம்மன் கோவிலில் அர்ச்சுனன், திரவுபதி திருக்கல்யாணம்



காஞ்சிபுரம்; கோவிந்தாவடி திரவுபதியம்மன் கோவிலில், அர்ச்சுனனுக்கும், திரவுபதிக்கும் திருக்கல்யாணம் இன்று விமரிசையாக நடந்தது.


காஞ்சிபுரம் அடுத்த, கோவிந்தவாடி அகரம் கிராமத்தில், திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இங்கு, அக்னி வசந்தப் பெருவிழா 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று  வில் வளைப்பு தலைப்பில், சென்னை ஈஞ்சம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த லதா என்பவர் மகாபாரத சொற்பொழிவு ஆற்றினார். நேற்று முன்தினம் மாலை ஊவேரி கிராமத்தில் இருந்து, திரவுபதிக்கு தாய் வீட்டு சீதனமும், பெண் அழைக்கு வரும் வைபவமும் விமரிசையாக நடந்தது. இன்று காலை 9:30 – 10:30 மணிக்குள் அரச்சுனனுக்கும் திரவுபதிக்கும் திருக்கல்யாணம் நடந்தது. சிவாச்சாரியர் திருமண வைபவத்தை நடத்தி வைத்தனர். இதையடுத்து, மாலை மாற்றும் நிகழ்ச்சியும், மண விருந்தும் வழங்கப்பட்டது. பின், அர்ச்சுனன் தீர்த்த யாத்திரையும், இரவு சுபத்திரை திருமண நாடகமும் நடந்தது.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்