தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவில் பாதுகாப்பிற்காக, 40 லட்சம் ரூபாய் செலவில் 102 சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோவில், மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு தினமும், 10,000க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். பெரியகோவிலில் பழைய கண்காணிப்பு கேமராக்கள் பழுதடைந்த நிலையில், 40 லட்சம் ரூபாய் செலவில், பெரியகோவில் திருச்சுற்று மாளிகை, மராட்ட கோபுரம், வெளிப்பகுதிகளில் 75 புல்லட் கேமராக்கள், அம்மன், சுப்பிரமணியன் உள்ளிட்ட சன்னிதிகளில் 25 டோம் கேமராக்கள், ராஜராஜன் நுழைவு வாயில் மற்றும் இரண்டு 360 டிகிரி கண்காணிக்கும் கேமராக்கள், கட்டுப்பாட்டு அறை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. இவை செயல்பாட்டிற்கு வந்தன.