அம்மன் கோவிலில் ஆடி மாத பிறப்பு, ஆடி வெள்ளி வழிபாடு



குறிஞ்சிப்பாடி; ஆடி மாத பிறப்பையொட்டி அம்மன் கோவில்களில் பெண்கள் வழிபட்டனர்.


தமிழ் மாதமான ஆடி மாத பிறப்பையொட்டி இன்று அம்மன் கோவில்களில் பெண்கள் வழிபாடு மேற்கொண்டனர். அதிகாலை 6:00 மணி முதல் குறிஞ்சிப்பாடி சுற்றுப்பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில், பெண்கள் அதிக அளவில் சுவாமி தரிசனம் செய்தனர். கூழ் வைத்து படையலிடுவது, மாவிளக்கு போடுதல், நெய் விளக்கு ஏற்றுதல், புஷ்ப மாலைகள் வழங்குவது, அர்ச்சனை செய்வது, அங்கபிரதட்சணம் செய்வது என, தங்கள் நேர்த்தி கடன்களை பெண்கள் அம்மன் கோவில்களில் செலுத்தினர். குறிஞ்சிப்பாடியில் உள்ள பிரசித்தி பெற்ற புத்து மாரியம்மன் கோவிலில் ஏராளமான பெண்கள் பக்தியுடன் அம்மன் வழிபாட்டில் ஈடுபட்டனர். இந்த கோவிலில் நடைபெறும் ஆடி மாத செடல் திருவிழா சுற்றுப்பகுதி கிராம மக்களிடையே பெரும் வரவேற்பைப் கொண்டதாகும். விரைவில் கொடியேற்றத்துடன் ஆடி செடல் திருவிழா தொடங்கும் என, புத்துமாரியம்மன் கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்