பழநி முருகன் கோயிலில் பயன்பாட்டுக்கு வந்த மூன்றாவது வின்ச்



 பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் மூன்றாவது வின்ச்சின் ரோப் மாற்றும் பணிகள் முடிந்து இன்று முதல் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது.


பழநி முருகன் கோயிலுக்கு சென்றுவர வின்ச், ரோப் கார், படிப்பாதை ஆகியவற்றை பக்தர்கள் பயன்படுத்துகின்றனர். இதில் 3 வின்ச்கள் பயன்பாட்டில் உள்ள நிலையில் மூன்றாவது வின்சில் 36 பேர் பயணிக்க முடியும். இந்த வின்ச்சில் 450 மீ., ரோப் பயன்படுத்தப்படுகிறது. பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஆண்டுதோறும் குறிப்பிட்ட இடைவெளியில் இந்த ரோப் மாற்றப்படுகிறது. ஜூலை 13 முதல் மூன்றாவது வின்சின் ரோப் மாற்றும் பணி நடந்தது. பணி முடிந்த நிலையில் நேற்று சோதனை ஓட்டம் நடந்தது. இன்று மதியம் 2:00 மணிக்கு பூஜைகள் செய்யப்பட்டு மூன்றாவது வின்ச் பக்தர்களின் பயன்பாட்டுக்கு வந்தது.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்