பவானியம்மன் கோவிலில் திரண்ட பக்தர்கள்; பெரியபாளையத்தில் போக்குவரத்து நெரிசல்



ஊத்துக்கோட்டை; பவானியம்மன் கோவிலில், ஆடி வெள்ளியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் திரண்டதால், பெரியபாளையத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


பெரியபாளையம் பவானியம்மன் கோவிலில், ஆடி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை துவங்கி, 14 வாரங்கள் விழா நடைபெறும். அப்போது, சனிக்கிழமை மாலை முதல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, பக்தர்கள் குடும்பத்துடன் சென்று அம்மனை வழிபடுவர். இன்று ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை என்பதால், காலை முதலே பக்தர்கள் திரண்டனர். ஆந்திராவில் இருந்து வந்த கனரக வாகனங்களை மாற்று வழியில் இயக்காததால், பெரியபாளையத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதனால், பெரியபாளையத்தில் இருந்து ஊத்துக்கோட்டை, சென்னை, புதுவாயல் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சாலைகளில், 3 கி.மீ., துாரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அதனால், இரண்டு மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து ஸ்தம்பித்தது. கோவிலில் கட்டுமான பணிகள் நடப்பதால், கோவிலுக்கு செல்லும் வழிகள் குறித்த எவ்வித பதாகையும் இல்லை. இதனால் தர்ம தரிசனம், கட்டண தரிசனம் செல்லும் வழி தெரியாமல் பக்தர்கள் திண்டாடினர். அதிகளவு பக்தர்கள் திரண்டதால், 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்