பரமக்குடி தர்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் திருவிளக்கு வழிபாடு



பரமக்குடி: பரமக்குடி ஶ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் முதலாம் ஆண்டு 108 திருவிளக்கு வழிபாடு நடந்தது.


பரமக்குடி தரைப்பாலம் அருகில் வடக்கு திசை நோக்கி தர்மா சாஸ்தா கோயில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கேரள மாநிலத்தில் நடக்கும் திருக்கல்யாண வைபவம் இங்கு நடப்பது சிறப்பாகும். தொடர்ந்து முதலாம் ஆண்டு 108 திருவிளக்கு வழிபாடு ஆடி முதல் வெள்ளி இரவு நடந்தது. மாலை 6:00 மணிக்கு மூலவர், உற்சவர் ஐயப்பன் சர்வ அலங்காரத்தில் வீற்றிருந்தார். பூரண புஷ்கலா தேவி அன்னபூரணியாகவும், துர்க்கை அம்மன் சந்தன காப்பு அலங்காரத்தில் இருந்தனர். தொடர்ந்து குத்து விளக்கு ஏற்றி பெண்கள் குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டனர். இரவு 8:00 மணிக்கு சொற்பொழிவு, மகாதீப ஆராதனை நிறைவடைந்த பிரசாதங்கள் வழங்கப்பட்டது. மேலும் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கினர். ஏற்பாடுகளை தர்மசாஸ்தா சேவா சங்க நிர்வாக குழுவினர் செய்தனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்