காஞ்சிபுரம்: உலக நன்மைக்காக காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், சென்னை அறம்வளர்ந்த நாயகி சேவை மையம் சார்பில் லலிதா சஹஸ்ரநாம பாராயணம் இன்று நடந்தது. இதில், பங்கேற்ற 108 பெண்கள், குங்கும அர்ச்சனை செய்து, விநாயகர், காமாட்சியம்மன், துர்க்கை, மஹாலட்சுமி, சரஸ்வதி மற்றும் அவரவர் குல தெய்வத்தை வேண்டி பூஜை செய்தனர்.