கோவை: மந்திரம் முழங்க 34ம் ஆண்டு ஜெகன்நாதர் தேரோட்டம்



கோவை: இஸ்கான் சார்பில் 34ம் ஆண்டு ஜெகன்நாதர் தேரோட்டம் நேற்று நடந்தது. தேரில் ஜெகன்நாதர், பலதேவர், சுபத்ராதேவி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

ராஜ வீதி தேர்நிலை திடலில் அமைச்சர்கள் விக்னேஷ், சம்பத்குமார், இஸ்கான் மூத்த தலைவர் பக்தி வினோத சுவாமி தேரை வடம் இழுத்து துவக்கி வைத்தனர். மேள தாளங்கள் முழங்க ராஜ வீதி, ஒப்பணக்கார வீதி, வைசியாள் வீதி, கருப்பகவுண்டர் வீதி வழியாக மீண்டும் தேர் நிலையை அடைந்தது.

பக்தர்கள் ‘ஹரே கிருஷ்ண ஹரே ராம’ மந்திரம் உச்சரித்தபடி இழுத்து சென்றனர். பாரம்பரியத்தையும், கலாசாரத்தையும் பறைசாற்றும் வகையில் இசைக்குழுவினரின் சிறப்பு பஜனையும், ஹரிநாம சங்கீர்த்தனமும், நடன நிகழ்ச்சிகளும் அனைவரையும் வெகுவாக கவர்ந்தன.

அமைச்சர் சம்பத்குமார் பேசுகையில்,‘‘இஸ்கான் ரதயாத்திரை என்பது மதவிழா மட்டுமல்ல. மக்களை ஒன்றிணைத்து அன்பு, சமத்துவம், மனிதநேயத்தை எடுத்துரைக்கும் திருவிழா’’ என்றார்.

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்