பச்சைவாழி அம்மன் கோவிலில் ரசீது இல்லாமல் கட்டணம் வசூல் பக்தர்கள் குற்றச்சாட்டு



செய்யூர்; சேம்புலிபுரம் கிராமத்தில் உள்ள பச்சைவாழி அம்மன் கோவிலில், அர்ச்சனை சீட்டுக்கு ரசீது இல்லாமல் கட்டணம் வசூலிப்பதாக பக்தர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.


செய்யூர் அருகே இடைக்கழிநாடு பேருராட்சிக்கு உட்பட்ட சேம்புலிபுரம் கிராமத்தில், பச்சைவாழி அம்மன் கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஏராளமான பக்தர்கள் வந்து தரிசிக்கின்றனர். விசேஷ நாட்கள் மற்றும் ஆடி மாதங்களில் பக்தர்கள் சிலர் மொட்டை அடித்து, கிடாவெட்டி, பொங்கல் வைத்து நேர்த்திகடன் செலுத்துவர். இந்நிலையில், இங்கு வரும் பக்தர்களிடம் ரசீது இன்றி, 2,000 ரூபாய் வரை கோவில் ஊழியர்கள் கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து பக்தர்கள் தட்டி கேட்டால், ‘இந்த கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்துவோரிடம் வழக்கமாக வசூலிப்பது தான். ரசீது கொடுப்பது கிடையாது. யாரிடம் வேண்டும் என்றாலும் புகார் அளித்து கொள்ளுங்கள்’ என ஊழியர்கள் அலட்சியத்துடன் தெரிவித்துள்ளனர். மேலும், வரிசையில் காத்திருப்பவர்களை காட்டிலும், அதிக பணம் வழங்குபவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதாகவும் பக்தகர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, துறை சார்ந்த அதிகாரிகள் இக்கோவிலில் ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்