உடுமலை: உடுமலை திருப்பதி கோவிலில், பவித்ர உத்ஸவத்தையொட்டி, சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றது. இக்கோவிலில், பவித்ர உத்ஸவம் கடந்த 28ம் தேதி துவங்கியது. வேத பிரபந்தம், சிறப்பு ேஹாமங்கள் உற்சவ திருமஞ்சனம் நடைபெற்றது. நேற்று காலை, 8:00 மணிக்கு சதுஸ்தான அர்ச்சனம் நடந்தது. பின்னர் நடந்த சிறப்பு அலங்கார பூஜையில், திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.