ஆண்டின் அனைத்து மாதங்களுமே சிறப்பானவை என்றாலும் ஆடி மாதம் மிகச் சிறப்பானது.ஆடி வெள்ளிக்கிழமையில் தான் லட்சுமி தேவி அவதரித்ததாக கூறப்படுகிறது. ஆடி வெள்ளியில் வீடுகளில் விளக்கேற்றி வழிபடக் குடும்பத்தில் செல்வமும் மகிழ்ச்சியும் பெருகும்.
ஆடி மாதத்தில் வரும் வெள்ளி சிறப்பு மிக்கதாக கருதப்படுகிறது. ஆடி வெள்ளி நாட்களில் மாவிளக்கு ஏற்றி வழிபடுவதால், ஆரோக்கியம் சீராகும்.அம்மனுக்கு கூழ்வார்த்தும்; மஞ்சள் அரைத்துப் பூசியும் வழிபடுவது சிறப்பான பலன்தரும். வீட்டில் மாலையில் ஐந்து முக தீபமேற்றி அம்பிகையை வழிபட வேண்டும். ஆடி வெள்ளி நாட்களில் பால் குடம், முளைப்பாரி எடுத்து வழிபடுவது சிறப்பான பலன்தரும் என்பது ஐதிகம். மாவிளக்கு ஏற்றி வழிபடுவதால், ஆரோக்கியம் சீராகும். பெண்கள் பலர் கூடி திருவிளக்கு பூஜை செய்வதும் சிறப்பானது. இந்த நாட்களில் கோயில்களிலும் அம்மனுக்கு விசேஷ அபிஷேகம், அலங்காரங்கள், பூஜைகள் செய்வர்.இன்று காய்கனி அலங்காரத்தில் அம்மனை தரிசிக்க ஆண்டு முழுதும் உணவுப் பஞ்சம் இருக்காது. மங்கலப்பொருட்கள் தானம் அளித்தால் துன்பம் நீங்கி நன்மை உண்டாகும். ஆடி வெள்ளியில் அம்மனுக்கு படைக்கப்படும் கூழ் அமிர்தமாகும் என்று சொல்லப்படுகிறது. இன்று அம்மனை வழிபட்டு அருளோடு வேண்டும் பொருளையும் பெறுவோம்.!