போடி; ஆடி வெள்ளியை முன்னிட்டு போடி குலாலர்பாளையம் கல்கத்தா காளியம்மன் கோயிலில் வளையல் மஞ்சள் அலங்காரத்தில் அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் தரிசனம் பெற்றனர்.
போடி அருகே மலை மீது உள்ள வடமலை நாச்சியம்ம்மன் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் வடமலை நாச்சியம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் தரிசனம் பெற்றனர். போடி கொண்டரங்கி மல்லையசுவாமி கோயிலில் துர்க்கை அம்மன், குலாலர்பாளையம் காளியம்மன் கோயில், தாய் ஸ்தலம் ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோயில், திருமலாபுரம் முத்து மாரியம்மன் கோயில், பத்திரகாளிபுரம் பத்திரகாளி யம்மன் கோயில், தேவாரம் பராசக்தி மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராத னைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பு அலங்காரத்தில் இருந்த அம்மனின் தரிசனம் பெற்றனர். கோயில்களில் கூழ் காய்ச்சி பக்தர்களுக்கு பிரசாத மாக வழங்கப்பட்டன.