கூத்தப்பாக்கம் ராகவேந்திரா கோவிலில் திருவிளக்கு பூஜை



கடலூர்: கடலுார், கூத்தப்பாக்கம் ராகவேந்திரா கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.


திருவிளக்கு பூஜைக்கு கடலூர் ஐஸ்வர்யா மாதர் சங்க லயன்ஸ் உமா சங்கர்தலைமை தாங்கினார். ‘வி ஸ்கொயர் மால்’ உரிமையாளர் அனிதா ரமேஷ், லஷனா சங்கர் கணேஷ் விளக்கேற்றி பூஜையை துவக்கி வைத்தனர். பூஜையில் ஏராளமானோர் பங்கேற்றனர். தொடர்ந்து பூஜையில் பங்கேற்றவர்களில் குலுக்கல் முறையில் 5 பேருக்கு பரிசும், ஏழை பெண்களுக்கு புடவைகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், ஐஸ்வர்யா மாதர் சங்க நிர்வாகிகள் உமா, பொருளாளர் கலைச்செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்