அஷ்டலட்சுமி முடக்கு மாரியம்மன் கோவிலில் காவடி செடல் உற்சவம்



புதுச்சேரி: கோவிந்த சாலை தேவி அஷ்டலட்சுமி முடக்கு மாரியம்மன் கோவிலில் பிரம்மோற்சவத்தையொட்டி நேற்று முன்தினம் பால்காவடி அபிேஷகம் நடந்தது.

புதுச்சேரி, கோவிந்த சாலை தேவி அஷ்டலட்சுமி முடக்கு மாரியம்மன் கோவில், 28ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 28 ம் தேதி காலை 8:00 மணிக்கு சக்தி கிரகம் புறப்பாடு, மாலை 6:00 மணிக்கு பம்பை உடுக்கை வர்ணித்தல் நிகழ்ச்சி நடந்தது.

நேற்று முன்தினம் காலை 9:00 மணிக்கு காவடி அபிேஷகம், சுவாமி புறப்பாடு நடந்தது. நேற்று காலை 9:00 மணிக்கு மகா அபிேஷகம், செடல் மற்றும் காவடி உற்சவம், மூலவர் காமாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஊர்வலம் நடந்தது. இன்று காலை 9:30 மணிக்கு தேர்த்திருவிழா நடக்கிறது.

4ம் தேதி, மாலை 6 மணிக்கு ஊஞ்சல் உற்சவம், 5ம் தேதி காலை மஞ்சள் நீராட்டு, விடையாற்றி உற்சவம் நடக்கிறது.

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்