மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்; வரும் 3ம் தேதி பரிவார மூர்த்திகளுக்கு மருந்து சாற்றப்படுகிறது



மதுரை; மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 3 ஆம் தேதி என்வகை மருந்து சாற்றுதல் நிகழ்வு தொடங்க உள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் - சுந்தரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் வரும் செப்டம்பர் 17ம் தேதி நடைபெறுகிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள பரிவார மூர்த்திகளுக்கு ஆகஸ்ட் 3ம் தேதி காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் என்வகை மருந்து சாற்றுதல் நிகழ்ச்சி தொடங்குகிறது. ஆகஸ்ட் 3ம் தேதி தொடங்கும் இந்நிகழ்வு 12ம் தேதி வரை 10 நாட்களுக்கு நடைபெறுகிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோயிலில் ஜூன் 25ல் முகூர்த்தக்கால் ஊன்றப்பட்டது. செப்.,17ல் (ஆவணி 31-ம் தேதி) காலை 7:45 மணி முதல் 8:10 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்