திட்டக்குடி: திட்டக்குடி அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில், மகா மாரியம்மனுக்கு ஆடி மூன்றாம் வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜை நடந்தது. அதனையொட்டி நேற்று முன்தினம் காலை உலக மக்கள் நலன் வேண்டி, மூலவர் ஸ்ரீ தேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சுவாமிக்கு விசேஷ திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து, மாலை பிரகாரத்தில் உள்ள மகா மாரியம்மனுக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. பூஜை ஏற்பாடுகளை, பஞ்சவடி, பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி செல்வ விநாயகர் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி ராதாகிருஷ்ணன், ஆலய ஆலோசகர் ராதாகிருஷ்ணன் செய்திருந்தனர்.