ஆதிசக்தி மாரியம்மன் கோவில் ஆடித்திருவிழா



தங்கவயல்: ராபர்ட்சன் பேட்டை 4வது பிளாக் பகுதியில் உள்ள ஆதிசக்தி மாரியம்மன் கோவிலில், 63ம் ஆண்டு ஆடித் திருவிழா நேற்றுடன் நிறைவடைந்தது.

இக்கோவிலின் 63ம் ஆண்டு ஆடித் திருவிழா, கடந்த ஜூலை 30 காலையில் கணபதி ஹோமம், விசேஷ பூஜை; மாலையில் எல்லை பூஜை, பாலகிருஷ்ணா லே – அவுட்டில் உள்ள ஸ்ரீ முனீஸ்வரர் கோவிலில் இருந்து தீச்சட்டி ஊர்வலம், இரவில் காப்பு கட்டுதல், அம்மனுக்கு வெள்ளி கவச அலங்காரம் செய்யப்பட்டது.

கடந்த, 31ம் தேதி காலையில் அம்மனுக்கு விசேஷ பூஜை, மதியம் குளக்கரையில் இருந்து பூக்கரகம் நகர்வலம் வந்து கோவிலை அடைந்தது. கூழ் வார்த்தலும், அம்மனுக்கு சந்தன அலங்காரம், பகலில் அன்னதானம், இரவில் அம்மன் தேர் பவனி நடந்தது. நேற்று காலையில் அம்ம னுக்கு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடத்தி, கரகத்துடன் பவனி வந்து மஞ்சள் நீராடி, உடை கலைப்பு நடந்தது.

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்