நெல்லிக்குப்பம்: பில்லாலி ரேணுகாம்பாள் கோவிலில் கொதிக்கும் எண்ணெயில் வெறும் கையால் வடை சுட்டு பக்தர் நேர்த்தி கடன் செலுத்தினார்.
நெல்லிக்குப்பம் பில்லாலி தொட்டி ரேணுகாம்பாள் முத்துமாரியம்மன் கோவில் செடல் திருவிழா கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 29 மற்றும் 30ம் தேதிகளில் அம்மன் வீதி உலா நடைபெற்றது.
நேற்று முன்தினம் அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து பெண்கள் ஊரணி பொங்கல் வைத்து பூஜை செய்தனர். அம்மனுக்கு வேண்டுதல் கொண்ட பக்தர்கள் செடல் போட்டு நேர்த்தி கடன் செலுத்தினர்.
அதே கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம், அவரது மனைவி ஜோதி, மகன் தீனா ஆகியோர் கொதிக்கும் எண்ணெயில் வெறும் கையால் வடை சுட்டு நேர்த்தி கடனை செலுத்தினர்.