தத்துவராயர் கோவிலில் குருபூஜை



சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த எறும்பூரில் தத்துவராயர் கோவிலில் குரு பூஜை நடந்தது.

தத்துவராயர் அவதார நட்சத்திரமான ஆடி மாத சதயத்தையொட்டி நேற்று காலை கோவில் வளாகத்தில் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், உள்ளிட்ட பல்வேறு சிறப்பு ஹோமங்கள் நடந்தது.

தொடர்ந்து சுவாமிக்கு பால், சந்தனம், இளநீர், பன்னீர், திரவியப்பொடி உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிேஷகம் நடந்தது.

தொடர்ந்து யாகசாலை கும்பத்தில் புனித நீர் கொண்டு மகா அபிேஷகம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது.

பூஜையில் பங்கேற்ற சிவனடியார்களுக்கு ஆடை தானம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

குரு பூஜையில், கோவிலுார் மடாதிபதி நாராயண ஞானதேசிகர், சிதம்பரம் ராமநாதன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்