விளாச்சேரியில் தயாராகும் களிமண் விநாயகர் சிலைகள்



திருப்பரங்குன்றம்: விநாயகர் சதுர்த்திக்காக மதுரை விளாச்சேரியில் களிமண்ணால் ஆன மெஹா விநாயகர் சிலைகள் தயாராகின்றன.

இங்கு சீசனுக்கு ஏற்றார் போல் களிமண், காகிதக்கூழ், பிளாஸ்டர் ஆப் பாரிஸ், சிமென்ட் மூலம், சுவாமி சிலைகள், நவராத்திரி கொலு பொம்மைகள், கிறிதுஸ்மஸ் குடில்கள் தயாரிக்கப்படுகின்றன.

விநாயகர் சதுர்த்திக்காக 2 இஞ்ச் முதல் 8 அடி உயர களிமண் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படும். இந்தாண்டு கருட வாகன விநாயகர், நந்திகேஸ்வரர் கணபதி, காமதேனு விநாயகர், ரிஷப கணபதி, சிவ பூஜை கணபதி, தேரில் விநாயகர், சந்தான கணபதி உள்பட பல்வேறு சிலைகள் களிமண்ணால் தயாரிக்கின்றனர். இச் சிலைகளை தமிழகத்தின் பல்வேறு பகுதியிலும் விநாயகர் சிலை ஊர்வலங்களில் பங்கேற்பதற்காக வாங்கிச் செல்கின்றனர்.

விஜயகுமார் கூறியதாவது: எங்கள் முன்னோர் கிராம திருவிழாக்களுக்காக களி மண்ணில் குதிரைகள் தயாரித்தனர். தொடர்ந்து எனது தந்தையுடன், நானும் குடும்பத்துடன் விநாயகர் சிலைகள் தயாரித்து வருகிறேன். இரண்டு அடி உயரம்வரை‌ களிமண், ஆற்று மணல் மூலம் சிலைகள் தயாரிக்க முடியும். அதற்கும் உயரமான சிலைகள் தயாரிக்க யானைச் சாணம் சேர்க்க வேண்டும். திருப்பரங்குன்றம் கோயில் யானை முகாம் சென்றுள்ளதால், அழகர்கோவிலில் சென்று வாங்கி வருகிறோம்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, மாசு கட்டுப்பாடு வாரிய அறிவுறுத்தல்படி களிமண்ணால் மட்டுமே சிலைகள் தயாரித்து, வாட்டர் பெயின்ட் பூசுகிறோம்‌. வெயில் நன்கு இருந்தால் ஒரு சிலை தயாரிக்க 18 முதல் 25 நாட்கள் ஆகும். மழை துாறினால்கூட பணிகள் பாதித்து விடும் என்றார்.

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்