எம பயம் தீர விழுப்புரம் மாவட்டம் அலகிராமத்தில் இருக்கும் திரிபுர சுந்தரி அம்மனை தரிசிப்போம்.
எமன் தனக்கு ஏற்பட்ட சாபம் தீர இங்கு நீராடி சிவனை வழிபட்டார். அதனால் சுவாமிக்கு ‘எம தண்டீஸ்வரர்’ என பெயர் ஏற்பட்டது. எமனுக்கு அருள் செய்தவர் என்பதால் இங்கு வழிபடுவோருக்கு எமபயம் இருக்காது.
அம்மனின் பெயர் திரிபுரசுந்தரி. தினமும் ஒன்பது விதமான முக பாவனையில் இந்த அம்மன் காட்சி தருகிறாள்.
பிறந்த நட்சத்திரம், கிழமைகளில் வழிபடுவது நல்லது. அம்மன் சன்னதிக்கு எதிரில் கதாயுதம் ஏந்தியபடி லகுலீசர் (சிவன்) இருக்கிறார். விநாயகர், எமதர்மர், சித்ரகுப்தர், விஷ்ணு, சித்தர் சன்னதிகள் உள்ளன. காஞ்சி மஹாபெரியவர் பலமுறை இக்கோயிலுக்கு வந்துள்ளார். சஷ்டியப்த பூர்த்தி(60 வயது), பீமரத சாந்தி(70 வயது), சதாபிஷேகம் (80 வயது), மரணபயம் போக்கும் மிருத்யுஞ்ஜய ஹோமம் இங்கு நடத்துவது விசேஷம்.
எப்படி செல்வது: திண்டிவனத்தில் இருந்து 14 கி.மீ.,
நேரம்: காலை 6:00 – 8:00 மணி; மாலை 5:00 – 7:00 மணி
தொடர்புக்கு: 97870 83707, 96296 28900