விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே பெரியாண்டவர் கோவிலில் ஆடி மாதத்தை முன்னிட்டு அம்மனுக்கு சாகைவார்த்தல் திருவிழா நடந்தது.
விக்கிரவாண்டி அடுத்த பொன்னங்குப்பம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள பெரியாயி உடனுறை பெரியாண்டவர் கோவிலில் வீற்றிருக்கும் முத்தால் அம்மனுக்கு சாகை வார்த்தல் திருவிழாவை முன்னிட்டு காலையில் வினாயகர், முருகன், பெரியாயி உடனுறை பெரியாண்டவர் ,முத்தால் அம்மன், துர்க்கை,பூரணி பொற்கலை உடனுறை அய்யனாரப்பன் சுவாமிகளுக்கு அபிஷேகம் செய்து கூழ் ஊற்றி மகாதீப ஆராதனை நடந்தது. மாலையில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து பக்தர்கள் பொங்கலிட்டு கும்பம் கொட்டி படையல் செய்து வழிபட்டனர். சென்னை, புதுச்சேரி, சேலம் பகுதியிலிருந்து குல தெய்வ வழிபாட்டு காரர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கிராம முக்கியஸ்தர்கள், இளைஞர்கள் முன்னின்று செய்தனர்.