நாகேஸ்வரி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா விமரிசை



தாம்பரம்: மேற்கு தாம்பரம், முத்துரங்கம் பூங்காவில் நாகேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆடி மாதம் மூன்றாம் வாரத்தை முன்னிட்டு, 53ம் ஆண்டு தீமிதி திருவிழா, ஜூலை 27ல் தொடங்கியது.


ஒவ்வொரு நாளும், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. நேற்று முன்தினம் இரவு, தீமிதி திருவிழா நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து, அம்மனை வழிபட்டனர். மதுரவாயலில் கங்கை அம்மன் நகரில் உள்ள கங்கை அம்மன் கோவிலில், ஆடி மாத 35ம் ஆண்டு கூழ்வார்த்தல் திருவிழா, வெகு விமரிசையாக நேற்று நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள், அம்மனை தரிசித்தனர். கோவில் நிர்வாகம் சார்பில் 1,500 பக்தர்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது. மதுரவாயல் இன்ஸ்பெக்டர் ஜெயராம், பக்தர்களுக்கு பிரியாணி பரிமாறினார். இந்த நிகழ்ச்சியில் அறங்காவலர் குழுத்தலைவர் தென்றல் குமார், துணை அறங்காவலர் யோகி பில்டர்ஸ் சரவணன் மற்றும் கோவில் நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்