ஆடி கிருத்திகை விழா ; காவடி கூடைகள் வாங்க பக்தர்கள் ஆர்வம்



காஞ்சிபுரம்: ஆடி கிருத்திகை விழாவையொட்டி, காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவில் அருகில் விற்பனை செய்யப்படும், மூங்கில் காவடி கூடைகளை முருக பக்தர்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். ஆடி கிருத்திகை விழா, வரும் 6ம் தேதி விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது.


இதையொட்டி, காஞ்சி புரம் குமரகோட்டம், வல்லக்கோட்டை முருகன், இளையனார்வேலுார் முருகன் கோவில்கள் உட்பட மாவட்டத்தில் உள்ள பல்வேறு முருகன் கோவில்களில், ஆடி கிருத்திகையையொட்டி சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடக்க உள்ளன. இதில், பக்தர்கள் நேர்த் திக்கடனாக, மூங்கில் கூடையில், பூக்கள், பழம், தேங்காய் உள்ளிட்ட பூஜை பொருட்களை காவடியாக எடுத்து சென்று முருகப்பெருமானை வழிபடுவர். இதையொட்டி, காஞ்சி புரம் கச்சபேஸ்வரர் கோவில் அருகில், மூங்கில் காவடி கூடைகள் தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு ஜோடி மூங்கில் கூடை, நான்கு பித்தளை மணி, கூடையை மாட்டுவதற்கு கொக்கியுடன் கூடிய மரச்சட்டம் உள்ளிட்ட, ஒரு செட் காவடி கூடை, 1,000 – 1,100 ரூபாய் வரை விற்கப்படுகிறது. ஆடி கிருத்திகையில் காவடி எடுப்பதற்காக முருக பக்தர்கள் மூங்கில் காவடி கூடைகளை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்