பழநி: பழநி, வடக்கு கிரி வீதியில் புலிப்பாணி ஆசிரமத்தில் சித்தர்கள் எழுதிய ஓலை சுவடிகளுக்கு சிறப்பு பூஜை நடந்தது. பழநி, அடிவாரம், வடக்கு கிரி வீதி பகுதியில் புலிப்பாணி ஆசிரமம் உள்ளது. இங்கு போகர், புலிப்பாணி சித்தர்கள் எழுதிய பழமையான ஓலைச்சுவடிகள் உள்ளன. ஆடி 18, ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஓலைச்சுவடிகளுக்கு போகர் விக்கிரகத்துடன் பூஜை செய்யப்பட்டது. மலர் தூவி சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள் பூஜைகள் செய்தார். பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.