செட்டியக்காபாளையம் நாகம்மன் கோவிலில் ஆண்டு விழா



கிணத்துக்கடவு: செட்டியக்காபாளையம் நாகம்மன் கோவிலில் இன்று ஆண்டு விழா நடந்தது.


கிணத்துக்கடவு, செட்டியக்காபாளையம் விநாயகர், நாகம்மன், கன்னிமார் காருப்பராயன் கோவில் ஆண்டு விழா நிகழ்ச்சி, 3 தேதியன்று, பொங்கல் வைக்கும் நிகழ்வு, காப்பு கட்டுதல், விநாயகர் பூஜை, அம்மனுக்கு மாங்கல்யம் அணிவித்தல் மற்றும் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தது. இன்று 4ம் தேதி, காலையில், கணபதி ஹோமம், கலசம் முத்தரித்தல், கோவிலை சுற்றி வலம் வருதல், அம்மனுக்கு மகா தீர்த்த அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தது. இதில், பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சுவாமிந்தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்