மருதமலை வனப்பகுதியில் பிளாஸ்டிக்கை தடுக்க குப்பைத்தொட்டி



வடவள்ளி; மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு செல்லும் படிக்கட்டு பாதை, வனப்பகுதியில் பிளாஸ்டிக்கை தவிர்க்க, குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது.


முருகனின் ஏழாம் படை வீடாக மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் கருதப்படுகிறது. அடர் வனப்பகுதியில் அமைந்துள்ள கோவிலுக்கு, பல்வேறு பகுதியிலிருந்தும் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வந்து செல்லும் பக்தர்கள், தாங்கள் கொண்டு வரும் பிளாஸ்டிக் கவர் மற்றும் பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்களை வனப்பகுதியில் வீசி செல்கின்றனர். இதனை தடுக்க, வெள்ளியங்கிரி மலை பாதுகாப்பு அமைப்பு மற்றும் வனத்துறை இணைந்து, வனப்பகுதியில் உள்ள படிக்கட்டு பாதையில், குப்பைத்தொட்டி வைக்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில், உதவி வன பாதுகாவலர் சவுமியா, மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் தக்கார் ஜெயகுமார், துணை கமிஷனர் விமலா, ஸ்ரீதேவி டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் சிவா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, மலை படிக்கட்டு பாதையில் ஒரு குப்பை தொட்டிகளை நிறுவினர். இதற்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட, குப்பைத்தொட்டிகளை படிக்கட்டு பாதையில் 30 இடங்களில் நிறுவப்பட்டுள்ளது. இதன் மூலம் வனப்பகுதியில் பிளாஸ்டிக் வீசுவது தவிர்க்கப்படும் என, வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்