செந்துறை மகாலெட்சுமி கோவில்களில் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திகடன்



நத்தம்; நத்தம் அருகே ஆண்டியபட்டி மற்றும் செந்துறை மகாலெட்சுமி அம்மன் கோவில்களில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திகடன் செலுத்தினர்.


செந்துறை குரும்பப்பட்டி மகாலட்சுமி அம்மன் கோவில் ஆடி திருவிழாவில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடந்தது. பின்னர் அலங்கரிக்கபட்ட தேரில் அம்மன் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. இதைத்தொடர்ந்து கோவில் முன்பு அமர்ந்து இருந்த பக்தர்களின் தலையில் பூசாரி தேங்காய் உடைத்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினார். அதன்பின்னர் சாட்டையால் பக்தர்களை அடித்து பூசாரி ஆசி வழங்கினார். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.இதைப்போலவே கம்பிளியம்பட்டி ஆண்டியபட்டி மகாலட்சுமி அம்மன் கோவிலிலும் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்