தண்ணீருக்குள் அமர்ந்து சிவாச்சாரியார்கள் மழை வேண்டி வருண ஜபம்



பொங்கலூர்: திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அலகுமலை வேலன் திருமண மண்டபத்தில் மழை வேண்டி வருண ஜபம் நடந்தது. இதை முன்னிட்டு தீப வழிபாடு, விநாயகர் வழிபாடு, மகா சங்கல்பம், புண்சிவாச்சாரியார்கள்யாக வாசனை, பஞ்சகவ்ய பூஜை, கலச பூஜை, வருணஜபம், வருண யாகம், மஹாபூர்ணாகுதி நடந்தது. நீர் நிரப்பப்பட்ட பெரிய அண்டாவில் சிவாச்சாரியார்கள் தண்ணீருக்குள் அமர்ந்து மழை பெய்ய வேண்டியும், நாடு செழிக்க வேண்டியும் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். அங்கு எழோந்தருளி இருந்த முருகப்பெருமானுக்கு தீர்த்த அபிஷேகம், அலங்கார தீபாராதனை ஆகியவை நடந்தது. விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்