பந்தலூர் முருகன் கோவிலில் திருவிளக்கு பூஜை; திரளான பெண்கள் பங்கேற்பு



பந்தலூர்: பந்தலூர் முருகன் கோவிலில் நடந்த திருவிளக்கு பூஜையில், திரளான பெண்கள் பங்கேற்று வழிபட்டனர்.


பந்தலூர் முருகன் கோவிலில் ஆடி மாதத்தை முன்னிட்டு, கோவில் மகளிர் குழுவினர் பங்கேற்ற சிறப்பு திருவிளக்கு பூஜை நடந்தது.முன்னதாக கோவில் குருக்கள் ரமேஷ் தலைமையில் முருகனுக்கு சிறப்பு பூஜை நடந்தது.தொடர்ந்து நடைபெற்ற திருவிளக்கு பூஜையினை, டாக்டர் ஹிரித்திகா துவக்கி வைத்தார். தொடர்ந்து குடும்ப ஒற்றுமை, ஊர் நன்மைக்காகவும், உடல் நலம் மற்றும் தீராத பிரச்சனைகள் தீரவும், சிறப்பு மந்திரங்கள் கூறப்பட்டு திருவிளக்கு பூஜை நடத்தப்பட்டது.திருவிளக்கு பூஜையினை மங்கலம் நடத்தினார். ஏற்பாடுகளை கோவில் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் கோவில் மகளிர் குழு நிர்வாகிகள் செய்திருந்தனர்.இதில் திரளான பெண்கள் பங்கேற்று வழிபட்டனர்


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்