மதுரை வைகையில் தர்ப்பணம் கொடுத்து வழிபட்ட பக்தர்கள்; வீசிச் சென்ற குப்பைகளால் மாசுபடும் ஆறு



மதுரை: ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் பொருட்டு நீர் நிலைகளில் புனித நீராடி இஷ்டதெய்வ ஆலயங்களில் வழிபாடு, சிறப்பு பூஜைகள் செய்து, ஏழைகள், இல்லாதோர், இயலாதோருக்கு அன்னதானம், வஸ்திரதானம் செய்வதன் மூலம் நாம் செய்த பாவங்கள், கர்மவினைகள், தீவினைகள் அனைத்தையும் போக்கி வாழ்வில் புண்ணியத்தை சேர்க்கும் என்பது நம்பிக்கையாக உள்ளதால் இன்று மதுரையில் உள்ள முக்கிய அனைத்து கோவில்களிலும் குறிப்பாக வைகை ஆற்றின் நீர்நிலைப் பகுதிகளில் மக்கள் ஏராளமானோர் தங்களின் முன்னோகளுக்கு தர்ப்பணம் கொடுத்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.


தொடர்ந்து தர்ப்பணம் முடித்து தர்ப்பணத்தில் வைக்கப்பட்ட பொருட்களை வைகை ஆற்றில் கண்ட இடங்களில் வீசி சென்ற நிலையில் வைகை ஆற்றின் நீர்நிலை கரையோரப் பகுதிகள் எங்கும் மக்கும் குப்பை, மக்காத குப்பை என எங்கும் குப்பை கூலங்களாக காட்சியளித்தது . பாரம்பரியம் காக்கபட வேண்டும் என்பதில் மாற்றுகருத்து இல்லை இருப்பினும் நமது செயல்கள் வரும் தலைமுறைக்கு அல்ல நமது தலைமுறைக்கே பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவிடகூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும் என வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள், இதுபோன்ற பாரம்பரிய  நிகழ்வுகளில் குறிப்பாக மதுரை வைகை ஆற்றுப்பகுதியில் நடைபெறும் இது போன்ற நிகழ்வுகளின் போது பொதுமக்கள் தங்கள் கடமை உணர்ந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்துகின்றனர் . மேலும் நிகழ்வுகளுக்கு பயன்படுத்தப்படும் பொருட்களை மக்கும் குப்பை மக்காத குப்பையாக தரம் பிரித்து வழங்கிடும் போது வைகை ஆறு மாசுபடுவது தடுக்கப்படும். ஒரு நாளில் இது போன்று நடைபெறும் நிகழ்வை ஒட்டி தூக்கி வீசப்படும் மக்காத குப்பைகள் நீர்நிலைகளை நாசப்படுத்தி வரும் சந்ததியினருக்கு அல்ல இப்போது வாழும் சந்ததியினருக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தி விடும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்கின்றனர் . மேலும் இது போன்ற நீர்நிலை பகுதிகளில் நடைபெறும் பாரம்பரிய நிகழ்வுகளின் போது மதுரை மாநகராட்சியும் முழு பங்களிப்புடன் பல்வேறு இடங்களில் குப்பைகள் வீசப்படாமல் தடுக்கும் வகையில் பல்வேறு இடங்களில் குப்பை தொட்டிகளை வைத்து,மக்கும் குப்பை மக்காத குப்பைகளை தரம் பிரித்து ஒன்று சேர்க்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மேலும் பொதுமக்களும் நமது பாரம்பரியம் காக்கப்படும் அதே நேரத்தில் சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதை தடுக்கும் வகையில் உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதே சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்