தினமும் ஒரு அம்மன்: புகழுடன் வாழ வேண்டுமா திருவாரூர் வாங்க



புகழுடன் வாழவும், கலைத்துறையில் பிரகாசிக்கவும் திருவாரூர் கமலாம்பிகையை தரிசிப்போம்.

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் அருள் புரியும் அம்மன் கமலாம்பிகை. தலையில் மூன்றாம் பிறை, கங்கையை சூடியதோடு, கையில் நீலநிற மலரை ஏந்தியபடி காட்சி தருகிறாள். கால் மீது கால் வைத்தபடி யோகாசன நிலையில் அம்மனை தரிசிப்பது சிறப்பு.

‘கமலா’ என்பதில் க–சரஸ்வதி, ம– பார்வதி, ல–மகாலட்சுமியையும் குறிக்கும். முப்பெரும்தேவியின் வடிவமான இவள் படிப்பு, பணம், நடனம், இசை என பக்தர்களின் விருப்பத்தை நிறைவேற்றுகிறாள். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் பாடிய கமலாம்பா நவாவர்ண கீர்த்தனையை பாடினாலும், கேட்டாலும் அம்மனின் அருள் கிடைக்கும்.

இங்குள்ள தீர்த்தம் அம்மனின் பெயரால் கமலாலயம் என அழைக்கப்படுகிறது. ஆடிப்பூர நட்சத்திரத்தன்று அம்மனை தேரில் தரிசிக்கலாம்.

எப்படி செல்வது: திருவாரூரின் நடுவில் கோயில் உள்ளது.
நேரம்: அதிகாலை 5:30 – 12:30 மணி; மாலை 4:00 –  8:30 மணி
தொடர்புக்கு: 04366 – 242 343

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்