காஞ்சிபுரம்: ஓரிக்கை மணிமண்டபத்தில் குரு வாரத்தை முன்னிட்டு சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொண்டுள்ள காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், வேத பாடசாலை மாணவர்களுக்கு இன்று அருளாசி வழங்கினார்.
காஞ்சிபுரம் அருகே உள்ள ஓரிக்கை மகா சுவாமிகள் மணிமண்டபத்தில் காஞ்சி சங்கராச்சாரியார்கள் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றும் சத்திய சந்திரசேகரேந்திர சுவாமிகள், சாதுர்மாஸ்ய விரதத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விரதத்தின் போது தினசரி சிறப்பு பூஜைகள், தர்ம காரியங்கள் மற்றும் வேத பாராயணங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், குரு வாரத்தை முன்னிட்டு இன்று நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில், வேத பாடசாலையில் பயிலும் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆன்மிக நெறிகளையும் வேதத்தின் பெருமைகளையும் எடுத்துரைத்து ஆசி வழங்கினார். காஞ்சிபுரம் இளைய சங்கராச்சாரியார் சத்திய சந்திரசேகரேந்திர சுவாமிகள் உடனிருந்தார்.