வாரணாசி புனித மண் கலசம் வழங்கும் நிகழ்ச்சி



புதுச்சேரி: புதுச்சேரி பா.ஜ., சார்பில், கவிஞர் குரு ரவிதாஸ் 650வது ஜெயந்தியை முன்னிட்டு வாரணாசி புனித மண் கலசம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. 


நிகழ்ச்சிக்கு மாநிலத் தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். இதில், குரு ரவிதாஸ் பிறந்த இடமான வாரணாசியிலிருந்து கொண்டு வரப்பட்ட புனித மண் அடங்கிய கலசம், ராஜ்பவன் தொகுதி அம்பேத்கர் நகர் செங்கழுநீர் அம்மன் கோவில் வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து, அந்த புனித மண் கலசங்கள் அனைத்து மாவட்டத் தலைவர்களுக்கும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், மாநில பொதுச் செயலாளர்  லட்சுமி நாராயணன், மாநில பொறுப்பாளர் காத்தவராயன், மாநில செயலாளர் ஹேமலதா, மாவட்ட பொறுப்பாளர்  வெற்றிச்செல்வம், மாநில துணைத் தலைவர்கள்  ரத்தினவேல், பழனி,  அமாவாசை, மாநில செயலாளர் தமிழ்மாறன், மகளிரணி தலைவர் தாமரைச்செல்வி, மாநில நிர்வாகிகள் ராஜகணபதி, கவுரிசங்கர், வேல்முருகன்,  செல்வராஜ், நாகேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். குரு ரவிதாஸின் சமூக சீர்திருத்த சிந்தனைகள் மற்றும் சமத்துவக் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில், இந்த புனித மண் கலசங்கள் அனைத்து தொகுதிகளுக்கும் எடுத்துச் செல்லப்பட்டு, அங்குள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. 


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்