புதுச்சேரி: புதுச்சேரி வைத்திக்குப்பம் முத்தாலம்மன் கோவிலில் பிரம்மோற்சவம் விழா துவங்கி நடந்து வருகிறது. இதையொட்டி தினமும் காலை சிறப்பு அபிேஷக ஆராதனை, இரவு சுவாமி வீதியுலா நடந்தது வருகிறது. பிரம்மோற்சவத்தையொட்டி, நடந்த சுவாமி வீதியுலாவில் முன்னாள் அமைச்சர் லட்சுமிநாராயணன் தரிசனம் செய்தார். நிகழ்ச்சியில் ஊர் பொதுமக்கள் பங்கேற்று கலந்து கொண்டனர்.