வீரராகவர் கோவிலில் வரும் 25ல் பவித்ர உத்சவம்



திருவள்ளூர்: திருவள்ளூர் வீரராகவர் கோவிலில், வரும் 25ம் தேதி பவித்ர உத்சவம் தொடங்குகிறது.

திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில், வரும் 25ம் தேதி முதல், செப்., 2ம் தேதி வரை பவித்ர உத்சவம் நடைபெற உள்ளது. தினமும் நடைபெறும் பூஜைகளில் ஏதேனும் குறைகள் இருந்தால், அதை நிவர்த்தி செய்வதற்காக, இந்த உத்சவம் நடக்கிறது.

பவித்ர உத்சவத்தை முன்னிட்டு, கோவில் மண்டபத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு, தினமும் காலை, இரவு சதுஸ்தான அர்ச்சனம், ஹோமம், சாத்துமறை உள்ளிட்டவை நடைபெற உள்ளன.

மாலையில், உற்சவர் பெருமாள் மாடவீதி புறப்பாடும் நடந்து வருகிறது. கோவில் வளாகத்தில் யாகசாலை பூஜை, காலை 9:30 – 11:00 மணி வரையும், இரவு 7:00 – 8:30 மணி வரையும் நடைபெறும்.

இந்த ஏழு நாட்களும், உற்சவர் வீரராகவ பெருமாள், மாலை 5:30 மணியளவில் மாட வீதிகளில் உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்