வரலட்சுமி விரதம் தமிழ் ஆடி மாதம் பௌர்ணமி இதுக்கு முன்பு அல்லது ஆவணி மாதத்தில் வரும் பௌர்ணமி திதிக்கு முன்பாக வரும் வெள்ளிக்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது.
புராண காலத்தில் கந்தபுராணத்தில் பார்வதி தேவி சிவபெருமானிடம் பெண்களின் நலனுக்காக சுமங்கலி பெயரில் மற்றும் செல்வம் செழிக்கவும் விரதம் வேண்டும் என கேட்ட பொழுது சிவபெருமான் வரலட்சுமி விரதத்தின் மகிமையை பார்வதி தேவிக்கு சொன்னதாக புராணங்கள் கூறுகிறது.
அந்த கதையில் அன்றைய காலகட்டத்தில் மகத நாட்டில் சாருமதி என்ற பெண் தன் குடும்பத்திற்காக செய்த சேவை மற்றும் இறைவனுக்கு செய்யும் பணிவிடைகளை செய்து வந்த பொழுது அவரின் உண்மையான பக்தியை கண்டு மகாலட்சுமி அவர் கனவில் தோன்றி தனக்காக வரலட்சுமி விரதம் இருக்கும்படி கூறினார். இதை தன்னுடன் இருக்கும் பெண்களுடன் சேர்ந்து இந்த பூஜையை செய்தார். இந்த விரதம் முடிந்த பிறகு அந்த பெண்களுக்கு நகைகள் செல்வம் ஆகியன கிடைத்ததாக சொல்லப்படுகிறது.
இதனை தொடர்ந்து பெரும்பாலான சுமங்கலி பெண்கள் இந்த விரதத்தை வருடந்தோறும் கடைபிடித்து வருகின்றனர். வரலட்சுமி பண்டிகை அன்று மகாலட்சுமியை வடிபட்டால் அஷ்ட லட்சுமிகளும் ஒன்றாக வழிபட்ட பலன் சொல்லப்படுகிறது. அன்றைய தினம் நோன்பு பூஜையின் முடிவில் ஒன்பது முடிச்சுகள் கொண்ட மஞ்சள் கயிற்றை பூவுடன் சேர்த்து வலது கையில் பெண்கள் கட்டி கொள்வார்கள். இந்த விரதம் இருப்பதால் தங்கள் கணவர் மற்றும் குடும்பம் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் இருப்பதாக நம்பப்படுகிறது.
இதனையொட்டி கோவை மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சுமங்கலி பெண்கள் தங்கள் வீடுகளில் மகாலட்சுமியின் உருவம் பதித்த முகத்தை வழிபட்டு அதற்கு சிறப்பு பூஜைகள் செய்து மகாலட்சுமி தாயாருக்கு நைவேத்தியம் செய்து தன் குடும்ப சொந்தங்கள் மற்றும் நண்பர்கள் குடும்பத்திற்கு பிரசாதம் கொடுத்தனர்.