பாகிஸ்தானில் பழமையான இந்து கோவில் இடிப்பு; விசாரணை நடத்த கோரிக்கை



பாகிஸ்தானின் கிழக்கு பஞ்சாப் மாகாணத்தில், 100 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான இந்து கோவில் ஒன்று இடிக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் குறித்து விசாரணை நடத்த மனித உரிமை ஆர்வலர்கள் ஒன்றிணைந்து கோரிக்கை விடுத்துள்ளனர். அருகிலுள்ள மதரஸா ஒன்றை விரிவுபடுத்துவதற்காக நிலத்தைப் பயன்படுத்தும் நோக்கில் கடந்த மாதம் இந்தக் கோவில் இடிக்கப்பட்டதாகத் தெரிகிறது. சுமார் 125 ஆண்டுகள் பழமையான இந்தக் கட்டமைப்பை மீண்டும் கட்டியெழுப்பவும், அதன் நிலத்தில் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படும் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் உள்ளூர் மக்கள், சிறுபான்மையினர் அமைப்புகள் மற்றும் ஒரு அரசியல் கட்சி ஆகியவை இஸ்லாமாபாத்தில் உள்ள ஷாபாஸ் ஷெரீப் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. சுமார் 1,000 சதுர மீட்டர் நிலப்பரப்பைக் கொண்ட இந்தக் பழமையான கோவில், லாகூரிலிருந்து சுமார் 130 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நரோவால் மாவட்டத்தின் சிராஜ் கிராமத்தில் அமைந்திருந்தது. சிறுபான்மையினருக்கான அரசியல் அமைப்பான பாகிஸ்தான் மசிஹா மில்லத் கட்சி முதலமைச்சர் மரியம் நவாஸ் ஷெரீப் தலைமையிலான பஞ்சாப் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. மத வழிபாட்டுத் தலத்தை இடித்ததாகக் கூறப்படும் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், கோவிலை மீண்டும் கட்டியெழுப்பவும் அக்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்