பேரூர் பிளேக் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்



கோவை; பேரூர் மற்றும்கோவை புதூர் அருகே அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பிளேக் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை காலை நடந்தது இதில் வேத மந்திரங்கள் முழங்க கும்ப கலசங்களுக்கு சிவாச்சாரியார்கள் கலச நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர். இந்த நிகழ்வில் பேரூராதீனம் 25ம் குரு மகா சன்னிதானம் சாந்தலிங்க மருதாசன் அடிகளார் மற்றும் கோவை கௌமார மடாலயம் சிரவைஆதீனம் நாலாவது மகா சன்னிதானம் ராமானந்த குருபர சுவாமிகள் மற்றும் தர்மராஜா திரவுபதி கொங்கு காசி அஷ்ட பைரவர் பீடம் ஆதீனம் கிருஷ்ணமூர்த்தி அடிகளார் கோவைபுதூர் ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் சத்யநாதர் சித்தர் பீடம் ஸ்ரீ சிவஜோதி சித்தர் ஆகியோர் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் சிறப்பு அலங்காரத்தில் மூலவர் ஸ்ரீ பிளேக் மாரியம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார் நிகழ்ச்சியின் நிறைவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்