திருநகர்: மதுரை விளாச்சேரி அக்ரஹாரத்தில் உள்ள ஸ்ரீ சைதன்ய விட்டல் மந்திர் வேத குருகுலத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று துவங்கியது. காலை சுப்ரபாதம் முடிந்து யாக பூஜை நடந்தது. மாலையில் கருட வாகனத்தில் வாசுதேவ கிருஷ்ணன், ருக்மணியுடன் புறப்பாடாகினார். இரவு 108 கலச பூஜை துவங்கியது. நாளை காலை கண்ணனை தொட்டிலில் இடும் நிகழ்ச்சியும், பஜனை பூஜை முடிந்து உறியடி உற்ஸவம், கிருஷ்ண லீலைகள் உபன்யாசம் நடக்கிறது. செப். 6 அன்று வாசுதேவ கிருஷ்ணன், ருக்மணி தாயார் திருக்கல்யாணம் நடைபெறும்.