கள்ளக்குறிச்சி சிவன் கோவிலில் துர்கை அம்மனுக்கு ராகு கால பூஜை



கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி சிவன் கோவிலில் துர்கை அம்மனுக்கு ராகு கால சிறப்பு பூஜை நடந்தது.


துர்கை அம்மனை வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் விளக்கேற்றி, அர்ச்சனை செய்து வழிபட்டால் வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கை. அதன்படி கள்ளக்குறிச்சி சிவகாமசுந்தரி அம்மன் உடனுறை சிதம்பரேஸ்வரர் கோவிலில் உள்ள துர்கை அம்மனுக்கு ராகு கால சிறப்பு பூஜை நேற்று நடந்தது. அதனையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வெள்ளிக்கவசம் அலங்காரத்துடன் மகா தீபாராதணை நடந்தது. பக்தர்கள் லலிதா சகஸ்ரநாம மந்திரம் வாசித்து, நெய் தீபம் ஏற்றி, எலுமிச்சை மாலை அணிவித்து, அம்மனை தரிசனம் செய்தனர். வழிபாடுகளை கோவில் அர்ச்சகர் அம்பி குருக்கள் குழுவினர் செய்திருந்தனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்