பழவேரி, முத்து மாரியம்மன் கோவில் பால்குட ஊர்வலம்



பழவேரி: பழவேரி, முத்து மாரியம்மன் கோவிலுக்கு நேற்று, பால்குடங்கள் எடுத்து, பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர்.

உத்திரமேரூர் ஒன்றியம், பழவேரி கிராமத்தில் வேப்ப மரத்தடியில் வீற்றிய முத்து மாரியம்மனை, அப்பகுதி மக்கள் வழிபட்டு வந்தனர்.

இக்கோவிலில் புதிதாக சிலை வடிவமைத்து வழிபட, அப்பகுதி மக்கள் தீர்மானித்தனர்.

அதன்படி, கோவிலில் அம்மன் சிலை பிரதிஷ்டை செய்து கடந்த ஜூலை 27ல், மஹா கும்பாபிஷேகம் விழா நடந்தது. தொடர்ந்து 48 நாட்களாக மண்டல அபிஷேகம் நடந்து வந்தது.

இதன் நிறைவு நாளான நேற்று காலை 9:00 மணிக்கு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.

தொடர்ந்து, காலை 10:00 மணிக்கு பழவேரி கங்கையம்மன் கோவிலில் இருந்து, பெண் பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக, முத்து மாரியம்மன் கோவிலை அடைந்தனர்.

அங்கு, அம்மனுக்கு தங்களது கைகளாலேயே பாலாபிஷேகம் செய்தனர். தொடர்ந்து மலர் அலங்காரத்தில் வீதியுலா வந்த அம்மனை, பக்தர்கள் வழிபட்டனர்.

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்