அணைகரைக்கோட்டாலத்தில் பால்குடம் ஊர்வலம்



கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த அணைகரைக்கோட்டாலத்தில் பொண்ணு முத்துமாரியம்மன், அய்யனார் கோவில் திருவிழா நேற்று நடந்தது.

திருவிழா கடந்த 2ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து, நடந்த பால்குட ஊர்வலத்தில் அணைகரைக்கோட்டாலத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் ஏந்தி கோவிலுக்கு ஊர்வலமாக நடந்து சென்று வழிபாடு செய்தனர். இதையடுத்து, பக்த்கள் கூழ் குடங்களை சுமந்து சென்று கொப்பரையில் ஊற்றி பொதுமக்களுக்கு வழங்கினர்.

மேலும், கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து சுவாமிக்கு படையலிட்டு, வழிபாடு செய்தனர்.

இன்று அய்யனார் சுவாமிக்கு ஊரணி பொங்கலும், முப்பூசை நிகழ்ச்சியும், இரவு சுவாமி வீதியுலாவும் நடக்கிறது. திருவிழா ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்